Thursday, March 27, 2008
ஏர் ஃபிரஷ்னர்களால் ஆஸ்துமா அதிகரிப்பு : ஆய்வில் தகவல்!
வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்கள் இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்துகிற சுத்தப்படுத்தும் திரவங்கள் ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கக் கூடும். ’வீடுகள், அலுவலகங்களில் அறைகளை மணமுட்டப் பயன்படுத்தப்படும் ஏர் ஃபிரஷ்னர்கள் (air fresheners), பொருட்களைச் சுத்தப்படுத்தப் பயன்படும் மிகை அழுத்த சோப்புத் திரவம் (furniture spray cleaners)ஆகியவற்றால் ஆஸ்துமா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஸ்பெய்னில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் ஜேன் பால் ஜோக் தலைமையிலான குழுவினர், ஐரோப்பாவில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் ஆஸ்துமா பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தினர்.அதில், வாரத்தில் ஒருநாள் ஏர் ஃபிரஷ்னர் பயன்படுத்தினால் கூட அது, ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. வீடுகளில் பொருட்களைச் சுத்தப்படுத்தப் பயன்படும் மிகை அழுத்தத் திரவங்கள் (sprays) , ஆஸ்துமா பாதிப்பை 15 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரிக்கின்றன. அதாவது ஆஸ்துமா பாதிப்புள்ள 7 பேரில் ஒருவர் இந்தத் திரவங்களால் மோசமான பாதிப்பை அடைகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஐரோப்பாவில் பத்து நாடுகளில் உள்ள 22 மையங்களில் ஆஸ்துமா பாதிப்புள்ள 3,200 பேர் ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு சமயத்தில், தேர்வு செய்யப்பட்டவர்களிடம் அவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மிகை அழுத்த திரவங்கள் பற்றி கணக்கெடுத்ததில், அத்திரவங்களை தினமும் பயன்படுத்துபவர்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல், ஒவ்வாமை ஆகியவற்றின் பாதிப்பு இருமடங்கு அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
(நன்றி-வேப்டுனியா)
கண்களை கண்காணியுங்கள்!
ஒருவரது கண்களைப் பார்த்தே சொல்லிவிடலாம் அவரது எண்ணத்தைப் பற்றி என்று சொல்வதுண்டு. அதுபோல நாம் சந்திக்கும் நபர் தற்போது உற்சாகமாக இருக்கிறாரா, சோர்வாக இருக்கிறாரா என்பதை கண்ணாடி போல காட்டிக்கொடுப்பதும் கண்கள்தான்.எனவே கண்களைப் பேணிக் காப்பது அவசியம். கண்ணிற்கு குளிர்ச்சிதான் மிக முக்கியம். எனவே வெயிலில் அலைந்து திரிந்து வீடு திரும்பியதும் கண்களை குளிர்ச்சியாக்கும் வேலையை முதலில் செய்யுங்கள்.
கண்களுக்காக செய்ய வேண்டியவை
கண்கள் மீது வெள்ளரித் துண்டங்களை வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.கண்களுக்கு ஏற்ற உணவாக கேரட், கீரை வகைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.நிம்மதியாக தூங்குங்கள். எனவே தூக்கம் தான் கண்களுக்கு நாம் கொடுக்கும் அதிமருந்து. தூக்கம் குறைந்தால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் வரும். தொடர்ந்து தொலைக்காட்சிப் பார்ப்பது, கணினியைப் பார்ப்பதைத் தவிருங்கள். ஒரு சில விநாடிகளுக்கு உங்களது பார்வையை வேறு பக்கம் செலுத்தி கண்களுக்கு ஒரு மாற்றத்தைக் கொடுங்கள்.கண்களில் தூசுப் பட்டால் உடனே கண்ணைக் கசக்காமல் சுத்தமான நீரினால் கண்களை திறந்தபடி கழுவுங்கள்.கண்களில் அதிகப்படியான தூசுப்பட்டால் சுத்தமான தண்ணீரில் கண்களை திறந்தபடி முக்கிக் கொண்டு பல முறை கண்களைத் திறந்து மூடுங்கள். தூசு தண்ணீரில் கரைந்து போகும்.
கண்ணுக்குக் கண்ணாடி
கண் பார்வை குறையும்போது ஏனோ தானோவென்று ஒரு கடையில் கண்ணாடி வாங்கிப் போட்டுக் கொள்ளாதீர்கள். கண் மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து கண்ணாடியை வாங்குங்கள். கண்ணாடி போடுவதற்கு பதிலாக லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதனை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏதேனும் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.பயன்படுத்தும் கண்ணாடியில் கீரல்கள் விழாமல் பார்க்க வேண்டியதும் அவசியம்.
சர்க்கரை வியாதி
கண்களை தாக்கும் நோய்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சர்க்கரை வியாதி கண்களை அதிகம் பாதிக்கிறது. எனவே சர்க்கரை வியாதி இருப்பவர்கள் கண்கள் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும்.உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.சர்ச்சரை அளவை உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாகவே சீராக வைக்கலாம்.
கண்புரை நோய்
கண்களில் இருக்கும் விழி ஆடியில் ஒரு படலம் படிந்து பார்வையை மறைப்பதுதான் கண்புரை நோய் எனப்படுகிறது.கண்புரை நோய் என்பது பெரும்பாலும் வயது மூப்பு காரணமாகவே உண்டாகிறது. உடலில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்கள், கண்களுக்கு ஏற்படும் காயங்கள், உடலில் உண்டாகும் நோயாலும் கண்புரை உண்டாகிறது. பரம்பரை நோயாகவும் இது உள்ளது. இது ஆங்கிலத்தில் காட்ராக்ட் என்று அழைக்கப்படுகிறது. கண்களில் படிப்படியாகப் பார்வை குறைந்து வருவதுதான் கண்புரை நோயின் அறிகுறியாகும். இதற்கு மருந்து, மாத்திரைகள் இல்லை. அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு.கண்புரை வளரும் தருவாயில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. சற்று வளர்ந்த பிறகே அறுவை சிகிச்சை செய்து அகற்றப்படுகிறது.மேலும் சர்க்கரை நோய் இருப்பவர்களை இந்த கண்புரை நோய் எளிதில் தாக்குகிறது.கணினியில் பணியாற்றினால்கணினி முன்பு அமர்ந்து பல மணி நேரங்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தால் கணினித் திரைக்கு ஆன்டி கிளேர் எனப்படும் ஒரு கண்ணாடியைப் போட்டு வைப்பது நல்லது. இது உங்கள் கண்களுக்கு கண்ணாடிப் போடுவதைத் தவிர்க்கும்.தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் கணினியைப் பார்ப்பதைத் தவிருங்கள். 20 நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையை வேறு பக்கம் திருப்புங்கள்.30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை 5 நொடிகள் வரை மூடியபடி இருங்கள். பின்னர் திறந்து 5 நொடிகள் கழித்து மீண்டும் மூடுங்கள். இது போல் ஒரு சில மணி நேரங்களுக்கு ஒரு முறையாவது செய்யுங்கள்.கணினியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது உங்களது கண்ணில் இருக்கும் நீர்த்தன்மை குறைகிறது. இதனை தவிர்க்க அவ்வப்போது இமைகளை மூடித் திறந்து கொண்டிருங்கள்.கண்களுக்கு உடற்பயிற்சி இருக்கிறது. அதாவது நல்ல நிலையில் அமர்ந்தபடி கண்களை மேலிருந்து வட்ட வடிவில் கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழற்றுங்கள். இதுபோல 5 முறை தொடர்ந்து செய்வது நல்ல பயற்சியாகும்.பெண்களுக்குமட்டமான மைகளையோ, மை பென்சிலையோப் பயன்படுத்தாதீர்கள்.இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாகக் கழுவிவிடுங்கள். முகத்தில் எந்த மேக்கப்பும் இருக்கக் கூடாது.
(நன்றி- வேப்டுனியா )
Tuesday, March 25, 2008
Falling asleep on the job can improve your memory
Hamburg, March 24 (DPA) Falling asleep on the job for a few minutes can improve your memory and mental performance, according to a team of German researchers.
Olaf Lahl at the University of Dusseldorf, Germany, has shown that simply falling asleep does more than refresh the brain - it can improve recall and mental efficiency.
In fact, a six-minute nap can have the same effect as night-time sleep on memory.
Lahl's team asked students to memorise a list of vocabulary and tested their ability to recall the list after an hour of playing solitaire.
Volunteers were asked to remember a list of 30 words. They were then given an hour's break before the memory test. During the break, some volunteers were allowed to nap for six minutes, while others had to stay awake.
The researchers found that those who had been allowed to nap displayed 'superior recall' in the memory test compared to those who stayed awake.
The researchers said this was the first time that a very brief sleep has been shown to improve memory.
'To our knowledge, this demonstrates for the first time that an ultra-brief sleep episode provides an effective memory enhancement,' Lahl wrote in the Journal of Sleep Research.
His researchers found that it was possible that falling asleep triggered a process in the brain that continued regardless of how long the person stayed asleep.
'It seems much more is happening during the initialisation of sleep than we once thought,' Lahl said.
'Maybe much of sleep's functional aspects are accomplished at its very beginning,' he writes in the article.
Friday, March 21, 2008
பனிச் சிகரங்கள் உருகுவது இருமடங்கு அதிகரிப்பு!!
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட தகவலின் படி, உலகில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உருகிக் கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கத்தைவிட பனிச் சிகரங்கள் உருகுவது இரட்டிபாகியுள்ளது என்று ஐ.நா ஆதரவில் செயல்பட்டு வரும் உலக பனிப்பாறை கண்காணிப்புச் சேவை எச்சரித்துள்ளது.இமாலயம் உட்பட உலகின் 9 மலைத் தொடர்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பனிச் சிகரங்கள் அடர்த்தி குறைந்து வருகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஆஸ்ட்ரியா, நார்வே, ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாட்டு மலைத் தொடர்களின் 100 பனிச் சிகரங்கள் குறிப்பிடத் தகுந்த அளவு சுருங்கியிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.1980ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டுவரை ஆண்டொன்றுக்கு 30 செ.மீ வரை உருகி வந்துள்ள பனிச் சிகரங்கள் 2006ஆம் ஆண்டு கணக்கின்படி 1.5 மீட்டர்கள் வரை உருகி வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆல்ப்ஸ் மற்றும் பைரெனீஸ் மலைத் தொடர்களில் பனிச் சிகரங்கள் குறிப்பிடத் தகுந்த அளவு குறைந்துள்ளதாக பி.பி.சி செய்தி ஏற்கனவே தெரிவித்திருந்தது.1980ஆம் ஆண்டு முதல் உருகிய பனிச் சிகரங்களின் தண்ணீர் சமவிகிதம் 10.5 மீட்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் வானிலை தாறுமாறாக மாறுவதற்கு இதுவே காரணம் என்று உலகப் பனிப்பாறைகள் கண்காணிப்புச் சேவை அமைப்பு எச்சரிக்கை செய்கிறது.பனிமலைகள் உருகுவது இன்னமும் தடுக்க முடியாத நிலைக்குச் சென்றுவிடவில்லை என்று கூறும் ஸ்காட் துருவப்பகுதி ஆய்வு அமைப்பின் டாக்டர் இயன் வில்லிஸ், உடனடியாக நடவடிக்கையில் இறங்கினால் பனிப்பாறைகள் உருகும் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
(நன்றி வெப் துணிய)
Thursday, March 13, 2008
சூயிங்கம் மென்றால் எடை குறையும்:
எதிக உடல் எடை கொண்டவரா நீங்கள், எடையை குறைக்க முடியாமல் தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம், சூயிங்கம் மென்றால் போதும் உடல்எடை குறைந்துவிடும் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்காவிலுள்ள லிவர்பூல் பல்கலைக்கழக் ஆராய்ச்சியாளர்கள் 'விர்க்லே' சூயிங்கம் நிறுவனத்துடன் இணைந்து ஓர் ஆய்வு நடத்தினர். அதன்படி, ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 60 பேர் தொடர்ந்து நான்கு நாட்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களுக்கு தினமும் மதிய உணவும், மாலையில் பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளும் தரப்பட்டன. நான்கு நாட்களுக்கு பின்னர், மதிய உணவுடன் சூயிங்கமும் தரப்பட்டது. சூயிங்கம் சாப்பிட்டவர்களால் மாலையில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமுடியவில்லை. இதனால், அடுத்த நான்கு நாட்களில் அவர்களது உடல்எடை குறைந்திருப்பது தெரியவந்தது.இதன்மூலம், சூயிங்கம் சாப்பிடுவதால் பசி உணர்வு குறைகிறது என்றும், எனவே நொறுக்குத்தீனி பழக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து சூயிங்கம் சாப்பிட்டால் உடல் மெலிய வாய்ப்பு உண்டு என்றும் தெரியவந்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
Monday, March 10, 2008
வீட்டில் வாகனத்தை நிறுத்த வாஸ்து கூறும் அறிவுரை
கார், பைக், சைக்கிள் போன்ற வாகனங்களை வீட்டில் எவ்விடத்தில் நிறுத்த வேண்டும் என்ற வழிமுறைகளையும் வாஸ்து சாஸ்திரம் வழங்குகிறது.வீட்டின் வெளியே வடக்கு மற்றும் கிழக்கு புறங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. இதைக் கடைப்பிடிக்காவிடில், வாகனங்களுக்கு அடிக்கடி பழுது ஏற்பட வாய்ப்புண்டு. மாறாக, வாகனம் நிறுத்துவதற்கான ஷெட்டினை, வீட்டின் வடமேற்கில் (வடக்கு சுற்று சுவரை தொடாதபடி) கட்டலாம். மேலும், வீட்டிற்கு வெளியே தென்கிழக்கு மற்றும் தென்மேற்கிலும் வாகனம் நிறுத்தலாம்.இதனால், வாகன விபத்துக்களையும் தவிர்க்கலாம் என்கின்றனர் வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள்.
(மூலம் - வெப்துனியா)
வீடு கட்ட ஏற்ற மரம்
மனைச் சிற்ப சாத்திர விதிமுறைப்படி மரங்களைத் தேர்ந்தெடுத்தால் பல வகையிலும் நமக்கு நல்ல பயன் விளையும்.மரங்களில் ஆண் மரம், பெண் மரம், அலி மரம் என மூன்று பிரிவுகள் உள்ளன.கால்கள், தூண்கள், வாசற்கால் கதவுகள் போன்ற பொருட்களைச் செய்வதற்கு ஆண் மரங்களைப் பயன்படுத்துவதுதான் சிறப்பு.உத்தரம், விட்டம், கூரைப்பகுதியை தாங்கும் வளை ஆகியவற்றிற்கு பெண் மரங்களைப் பயன்படுத்தலாம்.சட்டங்கள் போன்ற துணைப் பொருட்களைச் செய்வதற்கு அலி மரத்தைப் பயன்படுத்தலாம். ஆலயங்கள் அமைப்பதற்கு மாமரத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
எல்லா செல்வங்களையும் தரும் 'யானை கர்ப்பம்'!
எல்லா செல்வங்களையும் தரும் 'யானை கர்ப்பம்'!
ஒரு வீட்டின் நீளத்தை அகலத்தால் பெருக்கி வரும் அளவையே வாஸ்து சாஸ்திரத்தில் 'கர்ப்பம்' என்று குறிப்பிடுவர். ஒரு வீட்டின் நீளத்தை அதன் அகலத்தால் பெருக்கி வரும் எண்ணை, மீண்டும் ஒன்பதால் பெருக்க வேண்டும். அவ்வாறு பெருக்கி வரும் எண்ணை எட்டால் வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்தலின்போது மீதி 7 வந்தால், அது 'யானை கர்ப்பம்'.அந்த வகையில் வீட்டில் கர்ப்பம், யானை கர்ப்பமாக இருப்பின், அவ்வீட்டில் வசிப்போர்களின் வாழ்க்கை இன்ப மயமானதாக இருக்கும். அனைத்து விதமான செல்வங்களைப் பெற்று சிறப்பாக வாழ்வார்.
(மூலம் - வெப்துனியா)
கதவுகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் பலன்களும்
கதவுகளும் பலன்களும்!
ஓர் வீட்டிற்குரிய பலன்கள் அதில் பொருத்தப்பட்டுள்ள கதவுகளின் எண்ணிக்கையை பொருத்தும் அமைகிறது என்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள். அதன்படி கதவுகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் பலன்களும் வருமாறு:
2 கதவுகள் - நல்ல பலன்கள் ஏற்படும்.
3 கதவுகள் - புதுப் புது எதிரிகள் உருவாவார்கள்.
4 கதவுகள் - ஆயுள் நீடிக்கும்.
5 கதவுகள் - உடல் நலக்குறைவு ஏற்படும்.
6 கதவுகள் - குழந்தை பாக்கியம் அமையும்.
7 கதவுகள் - ஆபத்துகள் தேடிவரும்.
8 கதவுகள் - செல்வம் கொழிக்கும்.
9 கதவுகள் - நோய் நொடிகளால் தொல்லை.
10 கதவுகள் - திருட்டுகள் அதிகரிக்கும்.
(மூலம் - வெப்துனியா)
படுக்கையறை: வருத்தம் தரும் வடமேற்கு!
வீட்டில் அமைந்துள்ள படுக்கையறைகள் கூட, வீட்டில் குடியிருப்பவர்களின் பலன்களை மாற்றி அமைப்பதாக வாஸ்து சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.அதன்படி, வீட்டின் வடமேற்கு திசையில் படுக்கையறை அமைப்பது நற்பலன்களை தராது. அப்படி அமைந்துவிட்டாலும் அதை குழந்தைகள் மற்றும் விருந்தினர்தான் பயன்படுத்த வேண்டும். இந்த அறை தம்பதியருக்கு ஏற்றதல்ல; அப்படி பயன்படுத்தினால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
எய்ட்சை தடுக்க மகளிர் காண்டம்: விரைவில் விற்பனை
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 6 மார்ச் 2008 ( 16:49 IST )
எய்ட்ஸ் நோயை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான காண்டம் விரைவில் விற்பனைக்கு வருகிறது.மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், எய்ட்சை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்தில் ஆணுறைகள் விற்பனையில் உள்ள போதிலும், பெண்களுக்கான காண்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் பாலியல் தொடர்பான நோய்களை கட்டுக்குப்படுத்த முடிந்தது. இதை பின்பற்றி, இந்தியாவின் மேற்கூறிய மாநிலங்களில் மகளிர் காண்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக இங்கிலாந்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சுமார் 15 லட்சம் மகளிர் காண்டங்களை இறக்குமதி செய்யவுள்ளது. இந்த காண்டம் ஒன்றின் விலை 5 ரூபாய். இன்னும் 8 மாதங்களில் இந்த காண்டங்கள் தமிழகம் உள்பட மேற்கூறிய மாநிலங்களில் முதல் கட்டமாக விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மத்திய சுகாதாரத்துறை விரைவில் துவக்கவுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
Wednesday, March 5, 2008
ஆபத்து ஆபத்து-தொப்பையால் ஆபத்து
உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் தொப்பை உள்ளவர்களுக்கு இயல்பாக உள்ள மற்றவர்களைவிட 10 வருடங்கள் ஆயுள் குறைவு என்று தெரிய வந்துள்ளது. தொப்பையால் தினம் தினம் ஏகப்பட்ட வியாதிகளை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, இயக்குநீர்க் கோளாறுகள், குதிகால் வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முதுகுவலி, கழுத்து வலி, குடலிறக்கம், கால்களில் ரத்தக்குழாய் வீக்கம், தோல் வியாதிகள், பித்தப்பையில் கற்கள், பக்கவாதம் உள்பட பல்வேறு நோய்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே,இளம் வயதிலிருந்தே தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டு தொப்பையை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கோண்டு ஆயுளை நீட்டிக்கச் செய்யலாம்.
(மூலம் - வெப்துனியா)
வெயில் காலம் வருகிறது-வியர்வை நாற்றத்தைப் போக்க எளிய வழி!
கடுமையான வெயிலின் காரணாமாகவும், அயராது வேலை செய்ய வேண்டிய நிலையினாலும் பலருக்கும் வியர்வை ஏற்படுவது இயல்பு. ஆனால், இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், அருகில் உள்ளவர்களை முகம் சுழிக்க வைக்கும் என்பதால், அத்தகைய நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.
(மூலம் - வெப்துனியா)
பெண்களுக்காக-பொடுகை விரட்ட...
தலையில் சிறிய கடுகு அளவில் உருவாகும் பொடுகுகள் பெண்களை பாடாய் படுத்தும். இதை விரட்டியடிக்க இதோ ஒரு எளிய டிப்ஸ்:சிறிதளவு வேப்பம்பட்டையை சேகரித்துக் கொள்ளவும். இதை நன்கு இடித்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இந்த கலவை சிறிது ஆறியவுடன் நன்றாக கலக்கவும். அப்போது கலவையிலிருந்து நுரை நுரையாக பொங்கும். இதை எடுத்து தலையில் நன்றாக தேய்த்துக்கொள்ளவும். சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்கவும். இப்படி நான்கு அல்லது ஐந்து தினங்கள் செய்தால் போதும், பொடுகு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
(மூலம் - வெப்துனியா)
உடல் பருமனாகாமல் தடுக்க காலை உணவு உண்பீர்!
'உடல் பருமனாகிக் கொண்டிருக்கிறதே', 'உடல் உறுதியுடன் இல்லையே'... இவ்வாறெல்லாம் வருந்துவோருக்கு ஓர் எளிய வழி யாதெனில், அது காலை உணவை தவறாமல் உட்கொள்வதே!'பருமனைக் குறைக்கிறேன்' என்று கூறி, காலை உணவை பலரும் தவிர்க்கின்றனர். இந்த முயற்சியால் உடல் எடைக் கூடுமே தவிர, குறையாது என்பது அவர்களில் பலருக்கும் தெரிவதில்லை. காலை உணவைத் தவிர்க்கும் பலர், நொறுக்குத் தீனிகளையும், டீ மற்றும் காபி வகைகளையும் உட்கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்வர். இதனால், உடல் இளைப்பதற்கு பதிலாக பருமனாவது மட்டுமின்றி, உடல் உறுதியும் குறையும். இதுதொடர்பாக அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஐந்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டு, 2,216 பேர்களை மாதிரிகளாக வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வு, 15 வயதுக்கு குறைவானவர்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், நாள் தோறும் தவறாமல் காலை உணவை உண்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் நிறைந்து காணப்படுவதுடன், உயரத்துக்கு ஏற்ற எடையை மட்டுமே கொண்டுள்ளதும் கண்டறியப்பட்டது. அதேநேரத்தில், காலை உணவைத் தவிர்த்துவிட்டு சாக்லெட் போன்றவற்றை உட்கொள்பவர்களது உடல் எடை கூடுவது மட்டுமின்றி, உடல் உறுதியற்றும் இருப்பது தெரியவந்தது. இதனால், காலை உணவைத் தவிர்க்காமல் சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்வதே சாலச் சிறந்தது என்பது தெளிவு.
(மூலம் - வெப்துனியா)
