இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு '108'-க்கு டயல் செய்யலாம்!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அவசர கால சேவைகளை மேம்படுத்துவதற்கென, இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.தமிழக சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் எம்ரி நிறுவனத்துடன் அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்தி சேவைத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, மருத்துவம், தீ விபத்து மற்றும் காவல்துறை சம்பந்தமான அனைத்து அவசர தேவைகளுக்கும் கட்டணம் இல்லா தொலைபேசி தொடர்பு எண் 108 மூலம் இந்த மையத்தை மக்கள் 24 மணி நேரமும் தொடர்புகொள்ள முடியும்.
http://in.tamil.yahoo.com/Health/News/0805/07/1080507018_1.htm
Wednesday, May 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
http://payanangal.blogspot.com/2008/05/blog-post_07.html
Post a Comment